速報APP / 圖書與參考資源 / சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்

價格:免費

更新日期:2018-10-14

檔案大小:3.4M

目前版本:2.0

版本需求:Android 4.0 以上版本

官方網站:mailto:roostertech111@gmail.com

Email:https://kmprivacy.blogspot.com/p/privacy-policy-karthick-murugan-built_11.html

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖1)-速報App

சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.

தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப்பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖2)-速報App

இந்த மேன்மை மிக்க நூற்றாண்டுகளின் சரித்திரத்தை விரிவாகத் தமிழில் எழுத வித்துவான் மா.இராசமாணிக்கம் முன் வந்திருப்பது ஒரு நல்ல காரியம். அவர்கள் தம் நூலை நல்ல ஆராய்ச்சி முறையில் எளிய நடையில் யாவர்க்கும் பயன்படக் கூடிய வழியில் எழுதியிருக்கிறார்கள் என்பது சில பக்கங்களைப் படித்தாலே எளிதில் விளங்கும். நல்ல ஆராய்ச்சி நூல்களை அவர்கள் நன்கனம் கற்றறிந்திருப்பதோடு, சுயமாகவும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்கள். ஆயினும் அவர்கள் வெளியிட்டிருக்கும் அபிப்பிரா யங்கள் எல்லாவற்றையும் எல்லோரும் ஒருங்கே அங்கீ கரிப்பார்கள் என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அஃது அவசியமுமில்லை. நம் நாட்டுச் சரித்திரப் பகுதிகள் பலவற்றில் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு இடம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் இம்மாதிரி நூல்கள், அவ்வப்போது கிடைக்கும் ஆய்ந்த தீர்மானங்களை எல்லோரும் எளிதில் அறிந்து கொள்வதற்கு வேண்டிய நல்ல கருவிகளாகும். இந்தச் சோழர் சரித்திரத்தைப் பலர் படித்து நன்மை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖3)-速報App

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖4)-速報App

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖5)-速報App

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖6)-速報App

சோழர் வரலாறு - மா. இராசமாணிக்கனார்(圖7)-速報App